தமிழ் – உயர்தனிச்செம்மொழி ! : மௌலவி ஏ உமர் சஃபர் மன்பயீ
உலகினரை வியக்க வைக்கும் செம்மொழியே ! எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை இசுலாத்தின் வழியினிலே வைத்தவனே ! எத்தனையோ மொழிகளெல்லாம் உலகிருந்தும் – என்னை எழிலான தமிழ்மொழியில் வளர்த்தவனே ! எத்தனையோ அன்னையர்கள் பிறந்திருந்தும் – எனக்கு இனிதான தமிழ்தாயைத் தந்தவனே ! அத்தனையும் உன்கருணை ! உன் புகழே !! – நான் அதற்காக காலமெல்லாம் புகழுகின்றேன் ! அலஃகம்து லில்லாஃக் …. சொல்வதற்கு இயல்பான செந்தமிழே ! – ஏழு சுரங்களுக்குள் இசையான பைந்தமிழே ! நல்ல நெறி…