வாழ்வியல் மருத்துவம் – இருநாள் பயிற்சி, தஞ்சாவூர்

குறிப்புகள்: 1. வாழ்வியல் மருத்துவம் என்பது, மரபுவழிப்பட்ட வாழ்க்கை முறையை அடித்தளமாகக் கொண்டது. உணவுப் பழக்கங்கள் இம்முறையில் இன்றியமையாதவை. 2. புதிய மருத்துவ முறைகளில் கூறப்படும் நோய்களைக் குணப்படுத்துகிறோம் என்ற பேரில் மூலிகைகளையும் வேறு மருந்துகளையும் பரிந்துரைக்கும் வழக்கம் பல்வேறு மாற்று மருத்துவமுறைகளில் உள்ளது. வாழ்வியல் மருத்துவம் இம்முறையை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, புதிய மருத்துவத்தின் ஆய்வுகளை வைத்து, உடலை அணுக விரும்புவோருக்கு இம்முறை பொருந்தாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 3. மருந்துகள் இல்லாமல் வாழ விரும்புவோருக்கும், புதிய மருத்துவ முறைகள் வேண்டா என உண்மையிலேயே விரும்புவோருக்கும்…

ஊர்ச்சந்தை, சென்னை

தை 24, 2047 / பிப்.07, 2016 காலை 09.00 சென்னை மல்லர் கம்பம் எனும் மரபு வீர விளையாட்டு காண வாரீர்! சென்னையில் ஊர்ச் சந்தை – 2! செம்மையின் ஊர்ச் சந்தை மீண்டும் சென்னையில் நிகழவுள்ளது. முதல் சந்தை கடந்த சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சந்தை பிப்பிரவரி 7 ஆம் நாள் கூடுகிறது. இந்த நிகழ்வு ‘செம்மைச் சமூகம்’ எனும் அமைப்பினால் நடத்தப்படுகிறது. மரபுக்குத் திரும்பும் விருப்பம் கொண்டோரின் கூடல்தான் செம்மைச் சமூகம் ஆகும். ஊர்ச் சந்தை…

பிரண்டைத் திருவிழா – பனை ஓலை நுழைவுச் சீட்டு!

சித்திரை 20, 2046 / மே 3, 2045 பனை ஓலையில் நுழைவுச் சீட்டு! நண்பர்களே, பிரண்டைத் திருவிழாவிற்கான நுழைவுச் சீட்டுகளைப் பனை ஓலையில் அச்சிட்டுள்ளோம். பனை மட்டைகளை வெட்டிப், பதப்படுத்தி, வடிவாக நறுக்கி இதை உருவாக்கியுள்ளோம். பிரண்டைத் திருவிழா என்பதே மரபு வாழ்வியலை மீட்டெடுக்கும் பணிகளுக்கானதுதான். அதன் நுழைவுச் சீட்டு, தொன்மையான நமது பனை ஓலைத் தொழில்நுட்பத்தை மறுகட்டமைப்பு செய்துள்ளது. இப்பணியில் ஈடுபடும் இராச நவநீதகிருட்டிணன் , அவர் குடும்பத்தினர், நண்பர்களுக்கு நம் வாழ்த்துகள். பிரண்டைத் திருவிழா முத்திரை (logo) உருவாக்கியவர்: அருண் குமார் பெ…

வேளாண் வாழ்வியல் பயிற்சி

07.06.2045 / 21-6-14 அன்று “செம்மை வனத்தில்” வேளாண் வாழ்வியல் பயிற்சி நடைபெற்றது. செம்மை வன ஒருங்கிணைப்பாளர், மரபுவழி மருத்துவர் ம.செந்தமிழன்பயிற்சி அளித்தார். இயற்கை வழிவேளாண்மை என்றால் என்ன? , வேளாண் வாழ்வியல் கோட்பாடுகள், வாழ்வியல் அறம், ஒருங்கிணைந்த பண்ணையம், கருத்து பகிர்வு உரையாடல், பண்ணை வடிவமைப்புமுறை, செம்மை வலம்வருதல், இயற்கையோடு இணைந்திருத்தல், சந்தைப்படுத்துதல் எனப் பயிற்சி நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறியன. இப்பயிற்சியில் எனக்கு அறம் சார்ந்த வாழ்வியலுக்கான ஒரு வடிவம் கிடைத்தது.அதற்கான தத்துவம், கோட்பாடுகள் என என் எண்ணங்களை நெறி செய்து கொண்டதில்பெரும்…