மொழியையும், வரலாற்றையும் அழித்துவிட்டால் இனத்தை அழித்துவிடலாம். ஈராயிரம் வருடங்களாகத் தமிழினம் சந்தித்துவரும் அவலம் இது. தமிழனின் கல்வெட்டு என் அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறது? பழங்கால ஓலைச்சுவடி ஏன் இன்னும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை? மொழித் திணிப்பு ஏன் செய்யப்படுகிறது? எழுத்துரு கலப்பு செய்யத் துடிப்பது ஏன்? நம் வரலாற்று ஆராய்ச்சி முடிவுகளையெல்லாம் வெளியிடாமல் தடுக்கும் சக்தி எது? இன்று நம் முன்னே நிற்கும் கேள்விகள் பல… இன்று நம் முன் இருக்கும் முதன்மையான கேள்வி மொழியறிஞர்களையும், வரலாற்று அறிஞர் பெருமக்களையும் நாம் கொண்டாடுகிறோமா? நாம் யாரையெல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்…