வலி பொறுத்தவள் ! பேரருட் கருணையின் திரு உருவாகி வலி பொறுத்தெம்மை பிறப்பளித் தீன்று மேதினி மீதினில் நனி உயிராக்கி நன்மையும் தீமையும் வகுத்துரைத்தெமக்குக் களிப்புறச் சிந்தையில் கனித்தமிழ் ஏற்றி இச்சகத்தினில் புகழுறத் தனித்துவம் தந்து சபைகளும் போற்றும் நல் சான்றோனாக்கி காசினி மீதினில் கவியென்றென்னை தனியொரு ஆளாய் நிறுவிய தாயே நின் கால்புரள் புழுதிக்கு ஈடென்றாகிட இக்கடல் சூழ் உலகிலோர் கடவுளும் உண்டோ ? கவி இளவல் தமிழ்