திருக்குறளை மொழிபெயர்ப்பு என்பது பெருந்தவறு – ந.சி.கந்தையா
திருக்குறளை மொழிபெயர்ப்பு என்பது பெருந்தவறு சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த சாணக்கியர் (கௌடிலியர்) அருத்த சாத்திரம், காம சாத்திரம், தரும சாத்திரம், மோட்ச சாத்திரம், முதலிய பல நூல்களை வடமொழியில் செய்துள்ளார் என்றும் அவர் தமிழ்நாட்டினர் என்றும் அறிகின்றோம். சாணக்கியர் தமிழ்நாட்டில் அறியப்பட்டதும் வடநாட்டில் அறியப்படாததுமாகிய பொருள்களைப் பற்றிய நூல்களை இயற்றினமையால் அந்நூல்கள் வடநாட்டில் மிகவும் புகழ்பெற்று விளங்க ஏதுவாயின. சாணக்கியர் செய்துள்ள நூல்களுக்கு ஆதாரம் தமிழிலேயே இருந்திருத்தல் வேண்டுமென்பது வெளிப்படை. தமிழகத்தில் நூல்வழக்கிலோ செவிவழக்கிலோ உள்ள பொருள்களை ஆதாரமாகக் கொண்டு நூல் இயற்றிய சாணக்கியர்,…