மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 83
(குறிஞ்சி மலர் 82 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 29 தொடர்ச்சி “நீங்களும் உடன் வந்தது எங்களுக்கு மெத்த மகிழ்ச்சியாயிருக்கிறது” என்று மங்களேசுவரி அம்மாவிடம் அன்பொழுகக் கூறினாள் கனகம்மாள் இராசநாயகம். விமான நிலையத்தில் சுங்கப் பரிசோதனை முடிந்து வெளியேற அரை மணி நேரம் பிடித்தது. கனகம்மாள் இராசநாயகமும் வேறு சில பெண்களும் மாலை மேல் மாலையாக அணிவித்துப் பூரணியைக் கழுத்து நிமிர முடியாமல் திணறச் செய்துவிட்டார்கள். யாழ்ப்பாணத்தாரின் முகங்களிலும், கனிவான பேச்சுக்களிலும், பழகுகிறவர்களைக் கவரும் ஒருவித இனிமையும் குழைவும் இருப்பதைப் பூரணி கண்டாள். யாழ்ப்பாணத்துத்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 82
(குறிஞ்சி மலர் 81 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 29 புண்ணிய நல்வினை திரண்டனையபொன்னொளிர் பொலிவினைகண்ணிற்கரந்தானே மறுபடிகண்ணுள் கலந்தானே! விமானம் மேலே உயரச் சென்று பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த மங்களேசுவரி அம்மாள் ஏதோ புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தாள். பூரணி கண்களை மெல்லத் துடைத்துக் கொண்டாள். ‘உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் நானும் சேர்ந்து வரவேண்டும் என்பாய்! இப்போது என்னை மட்டும் கீழேயே விட்டுச் செல்கிறாய்’ என்று விமானம் புறப்படுமுன் நகைத்துக் கொண்டே கூறினானே அரவிந்தன். அப்போது அவன் முகம் எப்படி இருந்ததென்பதைக் கண்களை மூடிக்கொண்டு…
உலகப் பண்பாட்டு மாநாடு, யாழ்ப்பாணம்
உலகப் பண்பாட்டு மாநாடு, யாழ்ப்பாணம்
ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்! அயலவர்கள் அவர்களின் மொழி உச்சரிப்பிற்கேற்ப நம் ஊர்ப்பெயர்களை உச்சரித்தனர். திருநெல்வேலியைத் ‘தின்ன வேலி’ என்றும் திருவல்லிக்கேணியை ‘டிரிப்பிளிகேன்’ என்றும் சொல்வதுபோல் எண்ணற்ற ஊர்களை இவ்வாறுதான் தவறாக நாம் தமிழிலும் ஒலித்தோம். ஒருபுறம் ஆரியமயமாக்கப்பட்ட பெயர்கள் மறுபுறம் தவறான உச்சரிப்பிலான பெயர்கள் என இருபுறமும் தாக்குதல் நடைபெற்றது. திராவிட இயக்க எழுச்சியாலும் தனித்தமிழியக்கத்தினர் தொண்டினாலும் தமிழறிஞர்களின் ஆற்றுப்படுத்தினாலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் தமிழ்மய மாற்றங்கள் தேவை. இவ்வாறு நம்மிடையே குறை வைத்துக்கொண்டு, ஈழத்தமிழர்களை மட்டும் குற்றம்…
மாமனிதர் இரவிராசின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – காணுரை (Video)
மாமனிதர் இரவிராசின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – காணுரை (Video) மகிந்த இராசபக்ச அரசின் கைக்கூலிகளினால் கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டவர் மாமனிதர் நடராசா இரவிராசு. அன்னாரது 10ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தரை வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் ஐப்பசி 25, 2047 / 10.11.2016, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. கட்சியின் நல்லூர்க் கோட்ட இளைஞரணித் தலைவர் மயூரன் தலைமையில் நிகழ்வுகள் தொடங்கின. குறித்த…
முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும்
முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும் யாழ்ப்பாணம் மாவட்டம் புலோலி புற்றலை மகா வித்தியாலயத்தின் (1916-2016) நூற்றூண்டு விழா வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். இதன் போது முத்திரை வெளியீடும், நூல் வெளியீடும், சிறப்பிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
யாழ்.சிறையில் தமிழ்க் கைதிகள் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி!
யாழ்.சிறையில் தமிழ்க் கைதிகள் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி! யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுவதால் பெரும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதாகத் தமிழ் அரசியல் கைதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், மன ஆற்றுப்படுத்தலுக்கான வசதிகள் எதுவும் யாழ் சிறையில் வழங்கப்படாததால் தாம் மன நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 12 பேர் வரையிலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலை 7 மாதங்களுக்கு முன்னர் நவீன மயப்படுத்தப்பட்டது. ஆனாலும் இங்குக் கைதிகளின் மன ஆற்றுப்படுத்தலுக்கான தொலைக்காட்சி முதலான…
வஞ்சகன் பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? – பழ. நெடுமாறன் கண்டனம்
வஞ்சகன்(துரோகியின்) பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட்டு துரையப்பா என்பவரின் பெயரைச் சிங்கள அரசு சூட்டி, இந்தியத் தலைமையளார நரேந்திரர்(மோடி)யைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியத் தலைமையாளர் இரையானது வருந்தத்தக்கதாகும். 1975ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண மாநகரத்தலைவராக இருந்த ஆல்பர்ட்டு துரையப்பா தீவிர…
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியல் கல்லூரி, முத்தமிழ் விழா 2016
வீரசங்கிலி முத்தமிழ்விழா மலர் வெளியீடு சித்திரை 24, 2047 / மே 07, 2016 காலை 8.30 தரவு; பாலசிங்கம் பாலகணேசன்
யாழ்ப்பாணம், புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவையகத்தின் விழாவும் நிகழ்வுகளும்
‘யாழ்ப்பாணம், புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவைஅகம்’ அமைப்பின் ‘தாயக நூலகத் திறப்பு விழா!’ புங்குடு தீவில் (பன்னிரண்டாம் வட்டாரத்தில்) சொக்கலிங்கம் மன்றம் தொடங்கப்பட்டுப் பதினான்காம் ஆண்டு நிறைவு விழாவையும் புங்குடு தீவு ‘தாயகம் குமுகச் (சமூக) சேவைஅகம்’ அமைப்பு தொடங்கப்பட்டு நான்காவது ஆண்டு நிறைவு விழாவையும் முன்னிட்டு ‘புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவையகம்’ அமைப்பினால், புங்குடு தீவு சிரீகணேசக் கல்விக்கூடத்துக்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் ‘புங்குடுதீவு தாயகம் நூலகம்’ என்னும் பெயரில் நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளது. மேற்படி விழா சித்திரை 17, 2047 /…
முற்காலத் தமிழர்கள், ஆயிரக்கணக்கான கல்தொலைவில் கடல் வணிகம் மேற்கொண்டிருந்தனர்
முற்காலத் தமிழர்கள், ஆயிரக்கணக்கான கல்தொலைவில் கடல் வணிகம் மேற்கொண்டிருந்தனர் – நுண்கலைச் செல்வர் இராகவன் நுண்ணறிவும், திறனும், உறுதியான உள்ளமும் வாய்ந்த முற்காலத் தமிழர்கள் கலங்கள் கட்டி ஆயிரக்கணக்கான கல்தொலைவிற்கு அப்பாலுள்ள தீவுகளுக்கெல்லாம் போந்து தம் வணிகப்பண்டங்களை அங்கு விற்று அஃதாவது பண்டமாற்றுச் செய்து வந்தனர். ஐம்பெருந் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றாகப் புகழ்ந்து கூறப்பெறும் மணி மேகலையில் சாவ நாட்டிலுள்ள நாகபுரம் என்னும் பட்டினம் குறிப்பிடப்பட்டுள்ளது .மேலும் பூமிசந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும் சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துக்கள் நிகழ்ந்து…