மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான அறிவியல்
– அறிவியல் ஆவணப்படம் திரையிடலில் பேச்சு – வந்தவாசி. ஆடி 20, 2045 / ஆக.05.வந்தவாசி யுரேகா கல்வி இயக்கமும், இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இணைந்து உலகில் முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்சுட்ராங்கின் 84-ஆவது பிறந்த நாளையொட்டி விழா நடத்தினர். விழாவில் அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பெற்றது. நிகழ்வில், மனித சமூக வளர்ச்சிக்கும், சிந்தனைக்கும் புறம்பான மூட நம்பிக்கைகளிலிருந்து நாம் பெறுகிற விடுதலையே உண்மையான அறிவியலாகும் என்று யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர்…