செஞ்சீனா சென்றுவந்தேன் 11 – பொறி.க.அருணபாரதி
(ஆவணி 8, 2045 /ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி) 11. சியான் – தமிழ்நாடு – வரலாற்று உறவு சங்கக் காலம் தொட்டே, சீனாவிற்கும் தமிழகத்திற்கும் உறவுகள் உண்டு. சீனாவிலிருந்து வந்த பயணிகள் சிலர் தமிழகத்தில் தங்கியிருந்து, தமிழகத்தின் பண்பாடு – வரலாறு ஆகியவற்றைத் தங்களுடைய சீன மொழியில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். அவ்வாறு, தமிழகம் வந்த முதலாவது சீனப்பயணி பாகி யான் என்பவர், சீனாவின் நான் சிங் பகுதியிலிருந்து வந்தவர். இரண்டாவது வந்த சீனப்பயணி யுவான் சுவாங்கு,…