திலீபன் சாகவில்லை! – யோ புரட்சி
திலீபன் சாகவில்லை! பசி வந்தால் பற்று பறக்காது பசி வந்தால் பத்தும் பறந்திடுமெனும் பழமொழியை பார்த்தீபன் பொய்யாக்கினான். தேசம் பசித்திருக்கலாகாதென தேகம் பசித்திருந்தான். திருவிழா காணும் நல்லூர் தியாக விழா கண்டதே. ஆலய பூசை மறந்து உறவுகள் அண்ணா உன்முன் திரண்டதே. காந்தி அன்று இருந்திருந்தால் உன் காலடிக்கே வந்திருப்பார். திலீபன் உன் செய்கை கண்டு கிரீடம் தந்திருப்பார். தியாகத்தை பருகியதால்தானா சிறுதுளி நீர் பருகவில்லை. மெழுகாய் உருகியதால்தானா உணவு கேட்டு உருகவில்லை. மரணத்துக்கு போகையில் யாரும் மாலை சூடுவரோ.. இறக்கப் போகுமுன் எனக்குப்…