கொள்ளை போகும் இசுலாமிய அறக்கொடை – வைகை அனிசு
கொள்ளை போகும் வக்பு வாரிய நிலங்கள் மீட்டெடுக்கப் பல்வேறு அமைப்புகள் போராட்டம் உலகிலேயே அதிகமாக வக்பு சொத்துகள் உள்ள நாடுகளில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. அதே வேளையில் ஊழலிலும் முதலிடம் வகிப்பது இந்தியாதான். வக்பு என்ற அரபிச் சொல்லுக்கு அருப்பணித்தல் என்று பொருளாகும். இந்தியாவை ஆண்ட சுல்தான்களால் இம்முறை உண்டாக்கப்பட்டு முறையாகப் பேணப்பட்டு வந்தது. இந்தியாவில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களைப் பேணவும் முசுலிம்களின் அடக்க மனைகளை உருவாக்கிடவும், ஈத்கா மைதானம்(வருடத்திற்கு ஒருமுறை தொழுகும் இடம்) உருவாக்கிடவும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்திட ஆதரவற்றோர் காப்பகம்…