சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி- விசய் இராசுமோகன்
சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு ஒரு வருடம் முன்பாக ஒரு நாள் திரு.இராசேந்திரன் அவர்களை அலுவலகத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்து மேசையில் இருந்த அவரது குடும்ப ஆவணங்களை எடுத்துக் காண்பித்து, அவரது குடும்ப வரலாற்றை எழுதிவருவதாகக் கூறினார். நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்ன வழக்கமாக எல்லாரும் சொல்லும், பெருமைப்பட்டுக் கொள்ளும் குடும்ப வரலாறாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நூலை எடுத்து இரு நாள் கீழே வைக்கமுடியவில்லை. சாமியாடி சொல்லவந்த குறியைச் சொல்லிவிட்டே…
வரலாற்றுக் கல்விக்கான கையேடாக ‘வடகரை’ புதினம்
வரலாற்றுக் கல்விக்கான கையேடாக ‘வடகரை’ புதினம் வெளிவந்துள்ளது – நூல் அறிமுகவிழாவில் எழுத்தாளர் இமையம் பேச்சு திருச்சி.செப்.07. ’உயிர் எழுத்து’ பதிப்பகத்தின் சார்பில் திருச்சியில் தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் முனைவர் மு. இராசேந்திரன் இ.ஆ.ப.,எழுதிய ‘வடகரை- ஒரு வம்சத்தின் வரலாறு’ புதினம் அறிமுக விழா திருச்சி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தலைமையேற்ற எழுத்தாளர் இமையம் பேசும்போது, “ஒரு நல்ல நூல் என்பது அதனைப் படிக்கும் வாசகருக்கு, நாமும் இப்படி எழுத வேண்டுமென்கிற ஆசையைத் தூண்ட வேண்டும். இந்த ‘வடகரை’ நூலைப்…