தோழர் தியாகு எழுதுகிறார் 57; வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி – சமந்தா
(தோழர் தியாகு எழுதுகிறார் 56 தொடர்ச்சி) சமந்தா எழுதுகிறார்: பொருளியல்: வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி… பசித்தவர் புசிக்க உணவு தர வேண்டும்.. உணவா?… தவித்த வாய்க்குத் தண்ணீர் கூடத் தராமல் காயப் போடுவதுதான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளின் வாடிக்கையான நடைமுறையாக உள்ளது. அதன் படி, இந்தியச் சேம( ரிசர்வு) வங்கியின் ஆறு உறுப்பினர் கொண்ட பணவியல் கொள்கைக் குழு, திசம்பர் 5 முதல் 7 வரையிலான தனது இருமாதக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதமான மறு கொள்முதல் ஒப்பந்தம்(‘ரெபோ’) விகிதத்தை 0.35% உயர்த்தியுள்ளது. ம.கொ.ஒ.(ரெபோ)விகிதம் 5.9%இலிருந்து 6.25%ஆக உயர்ந்துள்ளது. இதனால் கல்வி, வாகனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும். சேம…