பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும் அனைவருக்கும் இனிய வணங்கங்கள்! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நடைபெற்ற “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சி சப்பானில் வசிக்கும் தமிழ் மக்கள், சப்பானிய மக்களின் பேராதரவோடு கடந்த புரட்டாசி 16 /அக்டோபர்3 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. நமது பரம்பரை உணவு வகைகளான கம்பங்கூழ்,கேழ்வரகு கூழ், இட்டலி மற்றும் உளுந்தில் செய்யப்பட்ட உணவுகள் எனப் பல்வேறு வகையான உணவுகள் சப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. நாம் அமைத்திருந்த செம்மொழி நூலகம், தமிழர்களின் பரம்பரை விளையாட்டுகளான சடுகுடு, பூப்பறிக்க வருகிறோம்,கிளித்தட்டு நாற்கரம், சிறுவர் சிறுமியர்…