மாவீரர் நாள் வணக்கமும் உறுதிமொழியும்
மாவீரர் நாள் வணக்கம் தாய்மண் காக்க தம்முயிர் நீத்த மாவீரர்களை வணங்கிப் போற்றுவோம்! விடுதலைப்போரிலும் இன அழிப்புப் படுகொலைகளிலும் உயிர்நீத்த மக்களும் மாவீரர்களே! அவர்களையும் தலைவணங்கிப் போற்றுவோம்! அவர்கள் கனவை நனவாக்குவதே உண்மை வணக்கம் என்பதால் அவர்களின் கனவை நனவாக்குவோம்! மாவீரர் நாள் உறுதிமொழி “மொழியாகி, எங்கள் மூச்சாகி – நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடு இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம் தமிழீழப் போரில்…
‘தமிழ்த்தேரின்’ அடுத்தத் தலைப்பு: – வணக்கம்
‘தமிழ்த்தேரின்’ அடுத்தத் தலைப்பு: – வணக்கம் மாசி 29, 2048 / 13.03.2017க்குள் உங்கள் படைப்புகள் வந்து சேரட்டும்! செந்தமிழர் சீர்மரபில் வந்தசொல் வணக்கம்! எந்தவொரு அறிமுகமும் தருமின்பச்சொல் வணக்கம்! அன்றுதொட்டு அகம்குளிர மலரும்சொல் வணக்கம்! மங்கலமாய் அமைந்தவொரு அன்புச்சொல் வணக்கம்! வேறுபாடுகள் சிறிதுமின்றி விளையும்சொல் வணக்கம்! வேற்றுமையிலும் ஒற்றுமையை ஊன்றும்சொல் வணக்கம்! தானென்ற அகந்தையை அகற்றும்சொல் வணக்கம்! தன்னைப்போல் பிறரையெண்ணும் சொல் வணக்கம்! வாழும் உயிர் அத்தனையும் வரவேற்கும் வணக்கம்! ஏழையென்றும் செல்வரென்றும் பார்க்காது வணக்கம்! படைத்தவனின் கருணையெண்ணி பணிவுடனே வணக்கம்!…
பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! மக்கள் அறிந்தும் அறியாமலும் தவறு செய்பவர்களாக உள்ளனர். அறிந்தே தவறு செய்பவர்கள் அதனால் பெரும்பழி வந்தாலும் திருந்த மாட்டார்கள். ஆனால், பேரிழப்பிற்கும் பெருந்துன்பங்களுக்கும் ஆளாகும் பொழுது தவற்றை உணருவார்கள். கண்கெட்ட சூரிய வணக்கம் மேற்கொண்டு என்ன பயன்? ஆனால், அறியாமல் தவறு செய்பவர்கள் அதனைப் பிறர் சுட்டிக்காட்டும் பொழுது் திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களும் அறிந்தே தவறு செய்பவர்களே! அதிமுக தலைவியின் செயலொன்று ஊடகங்களாலும் மக்களாலும் அங்கதமாகவும் கேலியாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறப்பட்டாலும்…
வணங்குதற்குரிய வாரம்!
வணங்குதற்குரிய வாரம்! ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை இரண்டாம் வாரம் / நவம்பர் நான்காம் வாரம் உலகத் தமிழ் மக்களுக்குப் போற்றுதலுக்கும்வணங்குதற்குரியதான சிறப்பான வாரமாகும். நவம்பர் 26, தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் பெருமங்கலமாகும். வாராது வந்த மாமணியாய் நமக்கு அமைந்த ஒப்பற்ற தலைவர் அவர். ‘கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமை‘(திருக்குறள் 1021)யுடன் வாழும் செம்மல் அவர். சலம்பற்றிச் சால்பில செய்யா மா சற்ற (திருக்குறள் 956) மாமனிதர் அவர். ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே…