(ஆனி 27,2046 / சூலை 12, 2015 தொடர்ச்சி) 6 சட்டஅறிவு   இல்லாத பொதுத்தகவல் அலுவலர்கள்   தகவல் உரிமைச்சட்டத்தில் அதிகாரமிக்கவர் பொதுத்தகவல் அலுவலர். பொதுத்தகவல் அலுவலருக்குத் தகவல் உரிமை சட்டத்தைப்பற்றிய சட்ட விழிப்புணர்வும் சட்டஞானமும் தெரியவில்லை. தஞ்சாவூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் கடந்த 6.6.2015 அன்று வணிக வரித்துறையில் பணிபுரியும் அருள் என்பவருடைய அலுவல் தொடர்பாகத் தகவல்களை வேண்டினோம். அதற்கு வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து ந.க.எண்3844-2015-ஆ6 என்ற மறுமொழி மடல் வந்தது.   அம்மடலில், “பிரிவு (8) ஒ. [8.j.] இன்படித் திரு.அருள்…