விருதுநகர் தொகுதியில் என்னைத் தேர்ந்தெடுத்தால், யார் காயப்பட்டுக் கிடந்தாலும் ஓடிச்சென்று காப்பாற்றுவேன் என்று தேர்தல் கூட்டத்தில் வைகோ பேசினார். விருதுநகர்  நாடாளுமன்றத் தொகுதியில் பா.ச.க. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வைகோ, திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டியில்  உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– ஆலமரங்களின் கூட்டம் குசராத்து மாநிலத்திற்கு நான் சென்றிருந்த போது, இன்றைய  தலைமையாளர் -பிரதமர்- வேட்பாளர் நரேந்திரமோடி என்னை வரவேற்றார். அங்கு நடைபெற்ற அமைதிப்பேரணியில் அவருடன் நானும் நடந்துவர ஏற்பாடு செய்தார். அனைவரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கக்கூடிய வதோரா என்ற ஊருக்குச் சென்றோம்….