மொரிசீயசு நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தவாசியில் வரவேற்பு விழா
மொரிசீயசு நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தவாசியில் வரவேற்பு விழா மொரீசியசு நாட்டின் மோக்கா நகரிலுள்ள மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் நிறுவப்படவிருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தை வட்டக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வந்தவாசி நகரில் ஆடி 09, 2047 / சூலை 24, 2016 அன்று சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்குப் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையேற்றார். செயலாளர் ப.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் குழுமம் உரிமையாளர் இரா.சிவக்குமார், அரிமா சங்க…