வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் கவர்வு – வைகை அனிசு
வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் கவர்வு தேவதானப்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைக் கவர்ந்து கட்டடங்கள் கட்டி வருவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள மருகால்பட்டியில் சேமக்காடுகள் என்று அழைக்கப்படும் நிலங்கள் வனத்துறைக்குச் சொந்தமானவை. சேமக்காடுகள் பகுதியில் கால்நடைகள் மேய்ப்பதற்கும், அப்பகுதியில் உள்ள கனிமங்கள், மரங்கள் வெட்டுவதற்கும் வனத்துறை ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இப்பொழுது மருகால்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைத் தனியர்கள் கவர்ந்து கட்டடங்கள் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு கட்டடங்களை எழுப்பிச் சேமக்காடுகள்…
தேனி மாவட்ட வனத்துறையினர் கொடுஞ்செயல்
தேவதானப்பட்டிப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் வனத்துறையினர் கொடுஞ்செயலால் சுற்றுலாப் பயணிகள் அல்லலுறுகின்றனர். மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை, எலிவால் அருவி, கும்பக்கரை அருவி முதலான பகுதிகளில் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளைத் துன்புறுத்துகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள எலிவால் அருவி, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி ஆகிய சுற்றுலா மையங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோடை மழை பருவமழை போல் பொழிந்ததால் வனப்பகுதில் ஆங்காங்கே ஊற்றுகள் தோன்றியுள்ளன. அருவிகளில் தண்ணீரும் கொட்டி வருகிறது. சில இடங்களுக்குச் செல்வதற்கு மாவட்ட நிருவாகம் சார்பில் தடை…