தனியார் பிடியில் இராணிமங்கம்மாள் உருவாக்கிய மத்துவார் குளம்
தேவதானப்பட்டி பகுதியில் இராணிமங்கம்மாள் காலத்தில் உருவாக்கப்பட்ட மத்துவார் குளம் கேட்பாரன்றிக் கிடக்கிறது. 1689 முதல் 1706 ஆம் ஆண்டு வரை சார்பரசியாக மதுரையை ஆண்டவர் இராணிமங்கம்மாள். அவர் காலத்தில் மதுரையிலிருந்து ஆவியூர், காரியாபட்டி வழியாக அருப்புக்கோட்டைக்கும் திருச்சுழியலுக்கும் பெரியகுளத்திலிருந்து கெங்குவார்பட்டி வழியாக மதுரைக்கும் சாலைகள் அமைக்கப்பட்டன. அச்சாலைகள் இன்று வரை மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது. இராணிமங்கம்மாள் காலத்தில் பல்வேறு குளங்கள், சத்திரங்கள், சாவடிகள், அன்னதான மண்டபங்கள் என ஏராளமாகக் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட குளங்களில் ஒன்று கெங்குவார்பட்டியில் உள்ள மத்துவார்குளம். இக்குளத்தை பொதுமக்களுக்காகக்…