முற்றாய் எழுக முள்ளிவாய்க்கால் நாற்றாய்- பரணிப்பாவலன்

    உற்றார் உறவுகள் உணவுக்காய் உடல்களை விற்றிட பசியுடன் விழிகள் இரண்டும் வற்றாக் கண்ணீர் வைகை ததும்பிட கற்ற கரும்புலி காடையர் பிடியில் சுற்றிய ஆடைகள் சுருங்கிச் செத்திட புற்றாய் வீழ்ந்ததே புலிப்படை கோட்டை கற்றை இனமாய் கதிர்கை இயக்கமாய் வெற்றியை மட்டுமே விளித்த தமிழராய் சாற்றியப் புகழுடன் சுற்றும் புவிக்குள்   மாற்றம் விதைத்த மறவர் கூட்டமாய் சீற்றம் கொண்டு சிங்கள நாpகளைத் தூற்றி யடித்தநம் தூயோர் எங்கே தோற்ற மறியா தொல்குடி வேந்தரே! கொற்றம் பிடிக்கவும் கொடுந்துயர் முடிக்கவும் முற்றாய்…

வன்னி மண் தின்ற பேய்கள்.. – செந்தமிழினி பிரபாகரன்

ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம்.. எம் இனம் அழிந்த சோகம் கொடும் துயரம்.. நினைந்து நினைந்து நாளுமிங்கு நாம் அழுகின்றோம்.. சிதைந்து சிதைந்து எம் இனமும் இன்னும் அழிகிறதே.. வன்னி மண் தின்ற பேய்கள்.. முப்பொழுதும் ஆட்டமிட கண்ணீரில் எம் மண்ணோ நித்தமும் குளிக்கிறதே.. ஆற்றுவார் யாருமில்லை.. யார் காப்பார் தெரியவில்லை.. நாடாண்ட இனம் இன்று நடைப்பிணமாய் வீதியிலே.. -தரவு :முகநூல்