வரலாற்று நூலாகத் திகழ்வது புறநானூறு – அ.சிதம்பரநாதன்

வரலாற்று நூலாகத் திகழ்வது புறநானூறு   சங்கக்காலத் தமிழ்ப் புலவர்கள் மக்கள் வாழ்வில் அமைந்த நல்லியல்புகளையே தம் பாடல்களிற் பாராட்டினார்கள். தீமை செய்வோர் வேந்தராயினும் அஞ்சாது இடித்துரைத்து அவரைத் திருத்தினார்கள். இங்ஙனம், ‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும்’ இவையென உள்ளவாறு விளக்கி, மக்களுக்கு நல்லுணர்வு வழங்கிய நல்லிசைப் புலவர்களுடைய உள்ளத்துணர்ச்சிகளின் பிழம்பாகவும், சங்கக்காலத் தமிழகத்தின் வரலாற்று நூலாகவும் திகழ்வது புறநானூறு. -முனைவர் அ.சிதம்பரநாதன்:  ஒளவை சு.துரைசாமியின் புறநானூற்று உரைக்கான அணிந்துரை

தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே! – சி.இலக்குவனார்

தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே!   தொல்காப்பியர் தம்முடைய சமசுகிருதப் புலமை தமிழின் அழகையும், தனித் தன்மையையும், சிதைப்பதற்கு இடம் தரவில்லை. வடவேங்கடம் தென்குமரி இடையே உள்ள கிடைத்த தமிழ் நூல்களின் அடிப்படையிலேயே தொல்காப்பியர் தம்முடைய சிறந்த நூலை யாத்துள்ளார் எனப் பனம்பாரனார் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் “என்மனார்’ “என்ப’ “என்மனார் புலவர்’ எனத் தம் முன்னவர்களைப் பற்றி 287 இடங்களில் குறிப்பிடுகின்றார். இத்தகைய மேற்கோள்களால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு நிலவிய தமிழ்மொழி தமிழ் இலக்கிய நிலைமை குறித்து அறிதற்கு இயலுகிறது. எனவே…