வரலாற்றை மறைத்தும் வாழ வேண்டுமா?          இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல மொழி இனங்களுள் தமிழினமே தொன்மை வரலாற்றுச் சிறப்பும் உயர்தனிச் செம்மொழியும் கொண்டுள்ளது. தமிழோடு உறழ் தரக்கூடிய ஆரியம் உலக வழக்கு அற்றதொன்றாயிருத்தலின் அதுபற்றி இங்கு ஆராய்ச்சியின்று. அது தவிர்த்த ஏனைய மொழிகள் எல்லாம் எல்லாவகையினும் தமிழுக்குப் பிற்பட்டனவே. இந்திய மொழிகளின் தாய் எனக் கருதத் தக்கது தமிழேயாகும். ஆயினும் இவ்வுண்மையைப் பலர் இன்னும் அறிந்திலர். கற்றவர்கள் என்று கருதப்படுவோருள் பலர் தமிழ்மொழி தமிழ்நாடு பற்றிய உண்மை வரலாறுகளை அறியாதவர்களாகவேயுள்ளனர். அவர்கள்…