எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை – வைகோ
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை (Budget) ! – வைகோ “நடுவண் அரசின் பொது நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடுவண் நிதி அமைச்சர் அருண் செத்லி அளித்துள்ள 2016-17ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில் கடந்த இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தவைதாம் இடம் பெற்றுள்ளன. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. பொருளியல் (economical) வளர்ச்சி 8.6 விழுக்காடு(%) இருக்கும் என்று போன ஆண்டு கணித்தது…