வருவாய் இதுசமயம்! வானோங்கு தமிழினம் வளர்ந்தோங்கச் செய்தவனே தேனோங்கு செந்தமிழால் நாளுமுன்னைப் பாடுகிறோம் மானோங்கு தமிழர்க்கு மருள்நீக்கும் மன்னவனே வானோங்கு செங்கதிரே வருவாய் இதுசமயம். . கையில் தமிழேந்திக் கருத்தில் உனையேந்தி மெய்யாக வழிநடப்போம் மேலான எம்தலைவா பொய்யான கதைகளும் புனையான வார்த்தைகளும் நைந்ததென நீஎழுந்து வருவாய் இதுசமயம். . வஞ்சகத்தின் வலையதனில் வகையாக மானானோம் குஞ்சரி மணவாளா குணமுள்ள மாதவனே வஞ்சகத்தின் தளையறுத்து வண்டமிழர் குலம்காக்க வஞ்சலென வந்திடுவாய் ஆறுதலைத் தந்திடுவாய். . அஞ்சித்தலை குனிந்தும் அடிமைபோல் வாய்புதைந்தும் அஞ்சலென வந்தவர்க்கு ஆதரவு…