திருக்குறள் அறுசொல் உரை – 092. வரைவின் மகளிர் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 092. வரைவின் மகளிர். பொருள்விருப்பால் மட்டுமே, பலரை விரும்பும் திருமணம்ஆகா மகளிர். அன்பின் விழையார், பொருள்விழையும் ஆய்தொடியார், இன்சொல் இழுக்குத் தரும். அன்புஇன்றிப் பொருள்கள் விரும்பும் பரத்தையின் இன்சொல் இழிவுதரும். பயன்தூக்கிப், பண்(பு)உரைக்கும் பண்(பு)இல் மகளிர், நயன்தூக்கி, நள்ளா விடல். பெறுபயன் ஆய்ந்து பண்போடு பேசும், பரத்தையரை நெருங்காதே. பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்(டு)அறையில்…