தோழர் தியாகு எழுதுகிறார் : வலியறிதல்
(தோழர் தியாகு எழுதுகிறார் : சியான் நிகழ்ச்சி- தொடர்ச்சி) வலியறிதல் ”வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல்.”– திருக்குறள் 471 அன்பர் மருது ”தேர்தல் பாதை திருடர் பாதை” என்று சொல்லவில்லை. தேர்தல் என்கிற குடியாட்சிய வடிவத்தை மறுதலிக்கவில்லை. தேர்தலைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு வலிமையான சக்திகளாகப் புரட்சிகர இடதுசாரிகள் இல்லை என்பதுதான் மருதுவுக்குள்ள கவலை. மெய்ந்நடப்பில் நமது ஆதரவோ எதிர்ப்போ தேர்தல் களத்திலே தீர்மானிக்கும் சக்தியாக இல்லை என்பதுதான் அவருக்குள்ள வருத்தம். இந்தச் சூழலில் ஒற்றுமை (ஐக்கிய) முன்னணித் தந்திரத்தைப் பேசுவதால்…