திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 048. வலி அறிதல்
(அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 048. வலி அறிதல் செயற்படும் முன்னம், எல்லாவகை வலிமைகளின், திறன்களின் ஆய்வு. வினைவலியும், தன்வலியும், மற்றான் வலியும், துணைவலியும், தூக்கிச் செயல் செயல்வலி, தன்வலி, பகைவலி, துணைவலி ஆராய்ந்து செய்க. ஒல்வ(து), அறிவ(து), அறிந்(து),அதன் கண்,தங்கிச் செல்வார்க்குச், செல்லாத(து) இல். முடிவதை, செயல்அறிவை ஆய்ந்து செய்தால், முடியாததும் இல்லை. உடைத்தம் வலிஅறியார், ஊக்கத்தின்…