மக்கள் நலக் கூட்டணிக்காகப் புதிய இணையத்தளமும் குமுக வலைத்தளப் (Social Network) பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.   மார்ச்சு ௮ (8) செவ்வாய்க்கிழமை முதல் இக்கூட்டணியின் சார்பில் வெளியிடப்படுகின்ற அறிக்கைகள், பொதுக்கூட்ட நிகழ்வுகள், பரப்புரைப் பணிகள் தொடர்பான அனைத்துச் செய்திகளும், படங்கள் – காணுரைகள் (videos) ஆகியவையும் இந்தத் தளங்களில் நாள்தோறும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பொதுமக்கள், இளைஞர்கள் தங்கள் கருத்துகளை இந்தத் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் களத்தில் மக்கள் நலக் கூட்டணிக்காகப் பணியாற்ற விழைகின்ற…