சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! – பாவலர் கருமலைத்தமிழாழன்
சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! நீருக்குள் நிழல்தன்னைத் தேடல் போன்று நீர்த்துபோன அரசியலில் நியாயந் தன்னைப் பாருக்குள் கிடைக்குமென்று தேடு கின்றார் பரிதாப ஈழத்துத் தமிழ ரின்று ! வேருக்கு நீருற்றி ஐ.நா மன்றம் வேதனையைத் தீர்த்துவிடும் என்றி ருந்தால் பேருக்குத் தீர்மானம் போட்டோ மென்றே பெயர்த்திட்டார் நம்பிக்கை திட்ட மிட்டே ! பால்தருவார் பசிக்கென்று காத்தி ருக்கும் பச்சிளமைக் குழந்தைகள்போல் ஈழ மக்கள் ஆல்போன்று மன்றம்தாம் நிழலைத் தந்தே அநீதிக்குத் தண்டனைகள் வழங்கு மென்று கால்கடுக்க ஏக்கத்தில் நின்றி ருந்தால் கள்ளிப்பால்…