கவிஞர் மு.முருகேசுக்கு மீரா விருது

கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் ‘வளரி’ கவிதை இதழும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விழாவில், தமிழில் குறும்பா(ஐக்கூ) கவிதைகள் குறித்த தொடர் செயல்பாடுகளுக்காகக் கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மானாமதுரையிலிருந்து வெளிவரும் ‘வளரி’ கவிதை இதழ் சார்பில், தமிழ்ப் படைப்புவெளியில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச்செய்துவரும் படைப்பாளிகளுக்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சப்பானிய ஐக்கூ வடிவக் கவிதைகளைத் தமிழில் பரவலாக அறிமுகம் செய்ததோடு, இளைய…

வளரி – சூல் வாசிப்புத்தளம் வழங்கும் கவிப்பேராசான் மீரா விருது

பங்குனி 21, 2047  / ஏப்பிரல் 03, 2016 காலை 10.00 மதுரை   வழங்குநர் : பேரா.கவிஞர் ஆதிராமுல்லை மீரா படத்திறப்பு : பேரா.தி.சு.நடராசன் அன்புடையீர், வணக்கம். கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு தங்கள் வருகையால்  சிறக்கட்டும்.   கவிதை நட்புடன், அருணாசுந்தரராசன்  ஆசிரியர் – வளரி