காலத்தின் குறள் பெரியார் : 2 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்
(காலத்தின் குறள் பெரியார் :1 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் : 2 அதிகாரம் 2. வள்ளுவம் போற்றுதல் அருளே அறிவே அகத்தூய்மை மூன்றன் பொருளே பொதுமறை தான். பிறப்பால் பிரிவை வளர்ப்பார் மறுத்தே அறப்பால் பொழியும்முப் பால். பொறுப்பாய் இருப்பாய் எனத்தான் உரைக்கப் பொருட்பால் பொழியும்முப் பால். காதலும் காமமும் சேர்ந்தே இசைந்திட வாழ்தலைச் சொல்லும்முப் பால். மொழிஇனம் நாடென்(று) எதையும் மொழியவில்லை வள்ளுவம் கொண்டபெரும் மாண்பு. உறவு மறுத்தல் அறமில்லை ஆண்பெண் உறவினில் வாழும்…