இந்தியக் காவல்துறையின் முதல் திருநங்கை பிரித்திகா யாசினி!   இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறையில் சார்ஆய்வாளராகத் திருநங்கை ஒருவர் சேர்ந்துள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி என்பவரே அவர். ஆனால், எளிதில் இந்தப் பதவி இவருக்குக் கிடைக்கவில்லை. ஆதலின் காவல்துறையையோ அரசையோ பாராட்ட ஒன்றுமில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்தாம் பாராட்டிற்குரியவர்கள்.   திருநங்கை பிரித்திகா யாசினி சேலம் மாவட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் முதலில் காவல் சார் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தபொழுது மூன்றாம் பால் என மறுக்கப்பட்டார். விண்ணப்பத்தை ஏற்பது…