காவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி
காவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் 01/08/18. நினைவில் கொள்ள வேண்டிய சிறந்த மனிதர்! வீரியமிக்க தமிழ்த் தேசியச் சிந்தனையாளர், காவிரிக் காப்புக்குழுத் தலைவர் தோழர் பூ.அர.குப்புசாமி. ‘பி.ஆர்.கே.’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பூலம்பாளையம் அரங்கசாமி குப்புசாமி அவர்கள் ஆடி 17, 1964 தி.பி. / 1.08.1933 ஆம் நாளில் பிறந்தார். வழக்கறிஞர் பட்டம் பெற்ற இவர் மானிடவியல் ஆய்வில் பட்டயமும் பெற்றவராவார். பூ.அர.கு. தமது 12ஆவது அகவையிலேயே அவரது தமையனார் முயற்சியால்…