(தோழர் தியாகு எழுதுகிறார் 224 : வல்லியத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல் – தொடர்ச்சி) வழக்கறிஞர் மகாதேவன் உரை இனிய அன்பர்களே! “வல்லிய(பாசிச)ச் சட்டங்கள் – த.எ.த. (ஊபா), என்ஐஏ” என்ற தலைப்பில் 2023 சூலை 6ஆம் நாள் வல்லிய(பாசிச) எதிர்ப்பு மக்கள் முன்னணி நடத்திய கருத்தரங்கத்தில் தோழர் சேல் முருகன் தலைமையில், தோழர் அரி பரந்தாமன், ப.பா. மோகன், நெல்லை முபாரக்கு ஆகியோருடன் நானும் பேசினேன். நேரில் வர முடியாத நிலையில் ஐதராபாத்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மகாதேவன் அனுப்பி வைத்த ஆங்கில…