தோழர் தியாகு எழுதுகிறார் 202 : எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி?
(தோழர் தியாகு எழுதுகிறார் 201 : சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு – தொடர்ச்சி) எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி? தென்காசி மாவட்டம் புளியங்குடி நடுக்கருப்பழகுத் தெருவைச் சேர்ந்த தங்கசாமி (த/பெ மாடசாமி) சென்ற 11.06.2023 அன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை. அவர் வெளியூர் வேலைக்குச் செல்வதும், அங்கேயே தங்கி விடுவதும் வழக்கமே என்பதால் குடும்பத்தினர் – அம்மாவும், தம்பி ஈஸ்வரனும் – நண்பர்களும் பெரிதாக அலட்டிக் கொண்டார்களில்லை. தங்கசாமி மறு நாளும் வரவில்லை, அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பும்…