தமிழுக்காக வாதாடினால் சிறையா? வழக்குகளைத் திரும்பப் பெறுக! – திருமாவளவன்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ் வழக்குமன்ற மொழியாகப் போராடி வரும் வழக்குரைஞர் பீட்டர் இரமேசு குமாருக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். இராமசுப்பிரமணியன், கே.இரவிசந்திரபாபு ஆகியோர், 6 மாதச்சிறைத்தண்டனையும் நீதிமன்ற அவமதிப்புச்சட்டத்தின்கீழ்த் தண்டனை பெற்றவர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகச் செயல்படமுடியாது என்பதன் அடிப்படையில் வழக்குரை உரிமைப் பறிப்பும் விதித்துள்ளனர். எனினும் மேல் முறையீட்டிற்காக இத் தண்டனையை 15 நாள் நிறுத்தி வதை்துள்ளனர். இது குறித்து, விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் உயர்நீதி மன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு…