தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்
தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு தமிழுக்குக் குரல் கொடுக்கும் காந்தி தனித்து விடப்படலாமா? உலகில் உயர்தனிச்செம்மொழி என்பது தமிழ் மட்டும்தான்! தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பு வழங்கியதுடன் அதற்கு முன்னர், அதிகார ஆணையின்றியே அரசின் சலுகைகளைத் துய்த்து வந்த சமற்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதியேற்பை இந்திய அரசு அளித்தது. விழா நிகழ்ச்சிகளில் இனிப்பு வழங்கினால், “எனக்கு எனக்கு” என்று குழந்தைகள் ஆளாளுக்குக் கை நீட்டுவதுபோல் பிற மொழியினர் கை நீட்டியுள்ளனர். செம்மொழித் தகுதியேற்பு என்பது சிறுவர் சிறுமியருக்கு இனிப்பு வழங்குவது…