வழிப்பறிக் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவரும் சாலைகள்
தேவதானப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி, எழுவனம்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் இருசக்கர ஊர்திகளில் வருபவர்கள் மற்றும் நடந்து வருபவர்களை உருட்டுக்கட்டை கொண்டு தாக்கி நகை மற்றும் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வடுகப்பட்டியில் காவல்நிலையம் இல்லை. பெரியகுளத்தில் உள்ள தென்கரை காவல்நிலைய எல்லைக்குற்பட்டது. ஏதாவது குற்றங்கள் நிகழ்ந்தால் பெரியகுளம் போய்தான் புகார் கூறவேண்டும். புகார் கூறிக் காவலர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து விடுகின்றனர். இதே போல தேவதானப்பட்டி அருகே உள்ள எழுவனம்பட்டி பகுதியில் உருட்டுக்கட்டை கொண்டு இருசக்கர ஊர்திகளில் வருபவர்களைத்…