நீதித்துறையினருக்கு அறநெறிப் பயிற்சி தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்
நீதித்துறையினருக்கு அறநெறிப் பயிற்சி தேவை! அரசின் நாற்பெரும் தூண்களுள் ஒன்றாக விளங்குவது நீதித்துறை. இந்தியாவில் மக்களாட்சி இந்த அளவிற்கேனும் இருக்கின்றது எனில், அதற்குக் காரணம் நீதித்துறைதான். பல்வேறு நேரங்களில் நீதிபதிகள் மக்களின் காவலர்களாக விளங்கும் வகையில் தீர்ப்பு வழங்குகின்றனர்’ இதனால் மக்கள் நம்பிக்கை மூச்சில் வாழ்கின்றனர். அதே நேரம் சட்டம் யாவர்க்கும் சமம் என்பது பொய்த்துப்போனதற்குக் காரணமும் நீதித்துறைதான் என்பதுதான் கொடுமையானது. பல நேரங்களில் மக்களின் காப்புநிலையிலிருந்து நழுவித் தாக்கு நிலையில் காலூன்றுவதே இன்றைய தலையாய சிக்கலாகின்றது. குற்றத்தின் அளவு, குற்றம் சாட்டப்பட்டவரின் சூழல்,…