அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 1/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு
ஆட்சியாளர்கள் – அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு, த.தா.கை.க.கா.ஆ.உ.தே.க.கு.ச (FFSHKFDR – Tamil Homeland) கூட்டாக வலியுறுத்தல்! இலங்கையில் மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல், கைது, தடுத்து வைத்தல்’ போன்றவை அரசியல் தலைமைகளாலும், படைத் தலைமைகளாலும், அரசுச் சார்புத் துணை ஆயுதக் குழுக்களாலும், மிகப் பொறுமையாக நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் ஆட்சியாளர்கள் – அரசு ஆகியவற்றின் நலன் சார்ந்த ‘அரசியல் நிகழ்ச்சி நிர’லின்படியே இவை நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்திருக்கும் வவுனியா மாவட்டக்…
பட்டினிப்போட்டுக் கொல்வதுதான் நல்லாட்சி அரசின் இலக்கணமா?
விடுதலை ஒன்றே தீர்வு! எங்கள் உறவுகளை எங்களோடு கூடி வாழவிடு! தமிழ் மக்களின் உன்னத உணர்வான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவும், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா சங்கத்தினரும் இணைந்து, பன்னாட்டுப் பெண்கள் நாளாகிய 2016 மார்ச்சு 08 அன்று வவுனியா பொங்குதமிழ் நினைவுத்தூண் முற்றத்தில் காலையிலிருந்து மாலை 4.00 மணிவரை அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை நடத்தினர். ‘விடுதலை ஒன்றே தீர்வு! வேண்டாம் இங்கு ஏமாற்றுப்பேச்சு’, ‘பட்டினிப்போட்டு கொல்வதுதான்…