வாக்களிக்கும் கடமை யாற்றுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
வாக்களிக்கும் கடமை யாற்றுங்கள்! சித்திரை 05, 2050 வியாழன் 18.04.2019 வாக்குப்பதிவு நாளன்று நாம் அனைவரும் தவறாமல் ஆற்ற வேண்டிய கடமை மறவாமல் வாக்களிப்பதே! வேறு என்ன பணிகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் வாக்களிக்க வேண்டும். நாம் வாக்களித்து நாட்டின் போக்கு மாறப்போகிறதா? என அலட்சியமாக இல்லாமல் ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை அன்னியர் வாக்கு வன்னியர்க் கில்லை நாடார் வாக்கு போடார் பிறர்க்கு செட்டியார் வாக்கு கிட்டிடா பிறர்க்கு தேவர்…