யாவரும் வாக்களிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
வாக்காளர் ஆத்திசூடி – இலக்குவனார் திருவள்ளுவன்
வாக்காளர் ஆத்திசூடி அளவிலா மதிப்புடைய வாக்குரிமையைப் பயன்படுத்த வாக்களிப்பீர்! ஆற்றல் மிக்கவரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பீர்! இன்னலைத் துடைக்க வருவோரைத் தேர்ந்தெடுப்பீர்! ஈடிலாச் சிறப்புடைய வாக்குரிமையைப் பயன்படுத்துவீர்! உங்களுக்காக உழைப்பவரைத்தேர்ந்தெடுப்பீர்! ஊக்கமுடன் செயல்படுவோரைத் தேர்ந்தெடுப்பீர்! எளிமையைக் கடைப்பிடிப்பவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஏற்றம்தரும் வல்லவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஐந்தாண்டுகளுக்குப் பொறுப்பானவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஒற்றுமைக்கு வழிவகுப்பவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஓங்குபுகழ் தருபவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஓளவியம்இல்லாதாரை(ஏய்க்காதவரை)த் தேர்ந்தெடுப்பிர்! – இலக்குவனார் திருவள்ளுவன் [வாக்காளருக்கான வேண்டுகோள் முழக்கங்கள் ஆத்திசூடி என்னும் பெயரில் தரப்பட்டுள்ளன.]
வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! – வ.கோவிந்தசாமி
வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! இந்தியச் சனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை! மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை! அடிமை வாழ்வை எண்ணி – அதில் கொடுமை நிலையெண்ணி விடுதலை வேட்கையிலே – அன்று வீரர் பலர் இருந்தனர் – அவர்கள் நித்தம் நித்தம் தம் நிலையை எண்ணி – தம் சித்தம் கலங்கி நின்றார் – அன்று சிந்தையில் துணிவு கொண்டார். யுத்தம் பல புரிந்து இரத்தம் பலர் சொரிந்து பெற்றது இந்தக் குடியரசு – அதை நன்றே பேணும் புவியரசு….
திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! – கோ. மன்றவாணன்
திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! விரலில் கருப்பு மை வைக்கும்போதே தெரியவில்லையா… நம்நாடு நம்மக்களை நம்பவில்லை என்று! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் தரும் அட்சயப் பாத்திரம் ஆவோம் என்பவர்கள்… தேர்தலுக்குப் பிறகு எங்கள் திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! விதிமீறல்களை வேடிக்கை பார்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்புதானோ தேர்தல் ஆணையம். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்பது கனவு சனநாயகம். மந்திரிகள் மட்டுமே மன்னர்கள் ஆவது நவீன சனநாயகம்! ஊழலில் சிதறிய ஒரு சொட்டே வெள்ளமாய்ப் பாயும் விந்தையைப் பார்க்கலாம் தேர்தல் திருவிழாவில் மட்டுமே! பணம் வாங்கி வாக் களித்த…
தேர்தல் தெய்வம் தந்த வரம் வாக்குரிமை – கவிஞர் திருமலைசோமு
தேர்தல் தெய்வம் தந்த வரம் வாக்குரிமை என் தேசத்தின்… என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படைத் தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்ற சாலையில் திடீர் பள்ளம் பொறுத்துக் கொண்டேன் நேற்றுவரை தடையின்றி வந்த குடிநீர், மின்சாரத்திலும் குறைபாடு… பொறுத்துக் கொண்டேன். உண்ணும் உணவுப் பொருட்களின் விலையோ உச்சத்தில் அமைதி காத்தேன்.. இதோ என் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் வரமாய் ஒரு வாசல் திறக்கிறது…. குரல் ஏதும் எழுப்ப முடியாமல் சாமானியனாய் இருக்கும் எனக்கு விரல்…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 17– ஆ.வெ.முல்லை நிலவழகன்
(பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015 தொடர்ச்சி) காட்சி – 17 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : குருவிக்கூடு நிலைமை : (தேர்தல் பற்றிய கருத்துரையைப் பேடைக்கு நேர்பட சிட்டு உரைக்கின்றது!) ஆண் : சின்னப்பேடே! சிரிப்பென்ன? என்ன! கொஞ்சம் சொல்லிவிடேன் பெண் : தேர்தல் தேர்தல் எனப் பலரோ வேர்வை வடியப் படித்திட்டார்! சோர்வே எதுவும் இல்லாது கூர்மையாய் சுவரில் எழுதிட்டார்! …