வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்!     வாக்குவங்கி அரசியலில் தோற்குது தமிழ்நாடு, தூக்கிலிங்கு தமிழன் மானத்தை ஏற்றிய துயர்பாரு, வாட்டுமிந்த நரகத்திலே வாழ்வதும் பெரும்கேடு, காக்குமந்தக் கடவுளுக்கும் இலவசம் தரும் நாடு! வாக்களித்த பின்னர் பாவம் கடவளுக்கும்கூட, சீக்கிரத்தில் கிடைத்திடுமே சுடலையின் திருவோடு!   வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! வெட்கமின்றி வெறுந்தொடையுடன், விரசமான இழிநடையுடன், வலம்வருவோர் எண்ணிக்கையோ தாண்டும் பலநூறு! வீட்டுக்குள்ளே சாக்கடையை ஓடவிட்டு அதிலே, வெற்றுடம்புடன் படுத்துறங்கி சுகங்கண்டதன் பலனாய், வான்புகழைக் கொண்டதமிழ் நாட்டுக்குள்ளே கடலாய், வக்கிரகுணச் சாக்கடைகள் வீதியெங்கும்…

அதிமுகவின் செல்வாக்கு சரியவில்லை! ஆனால், . . . – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிமுகவின் செல்வாக்கு சரியவில்லை!     சென்னை முதலான மூன்று மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின்பொழுது “எல்லாம் நானே” எனச்  சொல்லும் முதல்வர் செயலலிதாவின் செயல்பாடின்மை குறித்த சினம்  அப்பகுதி மக்களிடம் இன்னும் உள்ளது; மதுவிலக்கு குறித்து நாடகம் ஆடினாலும் மது எதிர்ப்புப் பாடல்களைப் பாடியதற்காகச் சிறுமியர் மீதும் தேசப்பாதுகாப்பு எதிர்ப்பு  என்னும் வகையில் கடுங்குற்ற வழக்குகள் தொடுத்தமையால், மதுவால் துன்புறும் குடும்பத்தினரிடையே வளர்ந்து வரும்   வெறுப்பு;  தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராகத் தீர்மானங்கள் இயற்றிக் கொண்டே, அடைக்கலமாக வந்த ஈழத்மிழர்களை அடக்கியும்…