அமெரிக்கத் தூதரகத்தில் ஒலித்த அழகு தமிழ்!- விகடன் வாசகர் விசயலட்சுமி
அமெரிக்கா செல்வதற்கான குடியேற்ற இசைவு பெற (புகவுச்சீட்டு -விசா) நேர்காணலுக்கு அமெரிக்கத்தூதரகம் (Cஒன்சுலடெ) சென்றிருந்தோம். அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலம் புரிந்து நாம் மறுமொழி அளிப்பது சிரமமாக இருக்கும் என்று தோன்றியதால், நேர்காணல் தமிழில் வேண்டும் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். நேர்காணலின்போது மொழி பெயர்ப்பாளருக்காகக் காத்துக் கொண்டிருந்த எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஆகியும் மொழி பெயர்ப்பாளர் யாரையும் காணாமல் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சமாளித்துக் கொண்டு, எங்களை நேர்காணல் செய்ய இருந்த குடியேற்ற அதிகாரி ஒரு பெண் என்பதால் ‘குட் மார்னிங்…