வாசிங்டன் சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டம்
பிப்பிரவரி 16-இல் வாசிங்டன் பகுதியில் நடந்த சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டமான “தமிழ் இலக்கியத்தில் சமயம்” மிகவும் நன்றாக நடந்து முடிந்தது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ”இமயம் முதல் குமரி வரை முருகன் வழிபாடு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் வாசு அரங்கநாதன் சித்தம் பற்றித் ”திருமூலரும் எட்மண்ட் கூசெரியும்” (Edmund Husseri) தலைப்பில் நல்லதொரு உரை ஆற்றினார்கள். …