பண்டைத்தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய அடையாளமாக இன்று நம் மத்தியில் எஞ்சி இருப்பது, ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு.   பல நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் எமது இனத்தின் அடையாளமான ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மைக் குடிகளான ஆயர்களின் (இடையர், கோனார்) மரபுவழி குல விளையாட்டுகளில் ஒன்றாகும்.   ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதுதான் விளையாட்டு.   சல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாக நடைபெறுகிறது. மதுரை…