கலைச்சொல் தெளிவோம்! 6.] வழக்குரைஞரும் தொடுநரும் – இலக்குவனார் திருவள்ளுவன்
வழக்குரைஞரும் தொடுநரும் பல் கேள்வி துறை போகிய தொல் ஆணை நல் ஆசிரியர் உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் (பட்டினப்பாலை :169 – 71) பலவாகிய கேட்டற்றொழிலையுடைய நூற்றிரளை முற்றக்கற்ற பெரிய ஆக்கினையைடைய நல்ல ஆசிரியர் வாதுசெய்யக்கருதிக் கட்டின அச்சம் பொருந்தின கொடிகளும், என உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர். எனவே, உறழ்(3) என்பது வாதிடுதல் என்னும் பொருளில் வந்துள்ளதை உணரலாம். இப்பொழுது நாம் வழக்குரைஞர் என்னும் சொல்லையே பொதுவான சொல்லாகக் கருதிப் பயன்படுத்துகிறோம். ஆட்சியியல், மனைஅறிவியல், சட்டவியல், ஆகியவற்றில் advocate…