வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா
குவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 13-06-2014 வெள்ளி மாலை 5.30 மணி அளவில் செம்மொழி விழா அரங்கில் மிகச்சிறப்பாக தமி்ழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது. (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்) விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர் செம்பொன்மாரி கா.சேது அவர்கள் வரவேற்க, முனைவர் அரவணைப்பு திரு. இளங்கோவன், முனைவர் திரு. பால் மனுவேல், பொறியாளர் திரு சாந்தகுமார், தமிழ் உணர்வாளர் திரு.தயாளன் ஆகியோர் விழா மேடைக்கு சிறப்பு சேர்த்தனர். விழாவில் முத்தாய்ப்பாக இயற்கை முறை மருத்துவம் பற்றி…