(001. இறைமை வழிபாடு தொடர்ச்சி) 001 அறத்துப் பால்        01 பாயிர இயல் 002. வான்சிறப்பு உலகையே வாழ்விக்கும் அமிழ்தமாம்      மழையின், பயன்களும் சிறப்புக்களும். வான்நின்(று), உலகம் வழங்கி வருதலான், தான்அமிழ்தம் என்(று),உணரல் பாற்று.      உலகையே நிலைக்கச் செய்வதால்,        மழைநீர்தான், அமிழ்தம்; உணர்க. துப்பார்க்குத், துப்(பு)ஆய, துப்(பு)ஆக்கித், துப்பார்க்குத், துப்(பு)ஆய தூஉம், மழை.   உண்பார்க்கு உணவை ஆக்குவதும்,          உணவாக ஆவதும் மழைதான். விண்நின்று பொய்ப்பின், விரிநீர் வியன்உலகத்(து), உள்நின்(று) உடற்றும் பசி.    மழைப்பொய்ப்பு நிலைத்தால், உலகத்து…