வேந்தர் முதலானவருக்கு வள்ளுவர் கூறியன அலுவலகத் தலைவருக்குப் பொருந்துகிறது – பெ.(உ)லோகநாதன்

அன்றைய  வேந்தர் முதலானவருக்கு வள்ளுவர் கூறியன இன்றைய அலுவலகத் தலைவருக்குப் பொருந்துகிறது.   பொய்யாமொழிப் புலவர் வாழ்ந்த காலம் குழுமங்களில்லா, அரசர்கள் கோலோச்சும் காலமாக இருந்தபடியாலும், அவ்வரசர்களுக்கு அறிவுரைகளைக் கூறிக் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பில் அமைச்சர்கள் இருந்தமையாலும், அவ்வமைச்சர்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளை ‘அமைச்சு’ என்னும் அதிகாரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். அவ்வதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளை முதன்மைச் செயலர் (Chief Executive) ஒருவர் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் அல்லது குணநலன்கள் எனக் கொள்வோமேயானால் குழும ஆளுகை (Corporate Governance or Corporate Management) கோலோச்சும் இக்காலக்கட்டத்திற்கும்…

எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளைத் திருவள்ளுவர் வகுத்தளித்துள்ளார்

எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளை நமக்குத் திருவள்ளுவர் வகுத்தளித்துள்ளார்   திருக்குறள் என்னும் உலகப் பொதுமறை, கி.மு. முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட முதுபெரும் படைப்பாகும். அதனில், உலக வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் உரைக்கப்பட்ட கருத்துகள் இன்றளவும் மிகச் சிறந்த வாழ்வியல் கோட்பாடுகளாக விளங்கி வருவது கண்கூடு. வள்ளுவர் தனது நூலினை அறம், பொருள், இன்பம் என முப்பாலாகப் பிரித்து மக்களுக்கு இக்காலத்திற்கும், பிற்காலத்திற்கும், ஏன், நம்பிக்கை இருக்குமெனின் மேலுலக வாழ்க்கைக்குமெனப் பல்வேறு கருத்துகளை வழிகாட்டு நெறிகளாய், வாழ்வியல் முறைகளாய் வகுத்தளித்துள்ளார். 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள்…

உயர்நிலை பெறும் வகையினை வள்ளுவர் உணர்த்தியுள்ளார் – பெ.(உ)லோகநாதன்

உயர்நிலை பெறும் வகையினை வள்ளுவர் உணர்த்தியுள்ளார்.   மனித வாழ்வின் நோக்கமே உயர்தல், உயர்நிலை அடைதல். இவ் இலக்குகள் தனி மனிதனுக்குப் பொருந்துவது போன்றே குழுக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். தனிமனித இலக்கு அடையப் பெற்றால் குழுவின் இலக்கோ நிறுவனத்தின் இலக்கோ அடைவது எளிது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் தனிமனித இலக்கினை அடைய முடியும் என்ற எண்ணமே குழு இலக்கு அல்லது நிறுவன இலக்கினை அடையப் போதிய உந்து விசையாக ஊக்கியாகச் செயல்படுகிறது. பொதுவாக, உயர்நிலை பெறும் அல்லது அடையும் வகையினை வள்ளுவர் தனது…